இந்தியாவின் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாக திகழும் கனரா ரொபெகோ மியூச் சுவல் பண்ட் நிறுவனம் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய ‘கனரா ரொபெகோ மிட் கேப் பண்ட்’ என்னும் நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான பங்குகள் விற்பனை வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியை இந்நிறுவனம் ஐந்தாண்டுகள் மற்றும் அதற்கும் மேலான நீண்ட காலத்திற்கு மூலதன மதிப்பை உருவாக்கும் நோக்கத் துடன், நடுத்தர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.
கனரா ரொபெகோ மியூச்சுவல் பண்ட் நிறுவனம்
நிதி நிறுவனம் என்ற அடிப்படையில், கனரா ரொபெகோ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இந்த புதிய நிதி திட்டத்தின் மூலம் திரட்டும் நிதியை திறமையான மேலாண்மை மற்றும் நியாயமான மதிப்பீட்டுடன் சிறப்பான வளர்ச்சி கண்டுவரும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யும்.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரஜ்னிஷ் நருலா கூறுகையில், எங்களின் இந்த புதிய மிட் கேப் பண்ட் திட்டம், நல்லதொரு தொகையை திரும்ப பெறுதல் மற்றும் முறையான முதலீட்டு திட்டம் ஆகிய இரண்டின் மூலம் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் நமது செல்வ வளத்திற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது.
இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் கள் 5 ஆண்டுகள் வரை பொறுமையாக இருக்கும் பட்சத்தில், சந்தை ஏற்ற இறக்கத்தை பொறுத்து சிறப்பானதொரு பலனை பெறுவார்கள் என்றார்.