Homeபிற செய்திகள்‘கண்மணி’ சிறப்பு திட்டத்தில்429 குழந்தைகளுக்கு நுண் ஊட்டச்சத்து வழங்கல்-விருதுநகர் மாவட்ட பெற்றோர் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

‘கண்மணி’ சிறப்பு திட்டத்தில்429 குழந்தைகளுக்கு நுண் ஊட்டச்சத்து வழங்கல்-விருதுநகர் மாவட்ட பெற்றோர் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

விருதுநகர் மாவ ட்டத்தில், மொத்தம் 12 வட்டங்களில் உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய 240 குழந்தைகள் மற்றும் வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய 189 குழந்தைகள் என மொத்தம் 429 குழந்தைகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து 3 மாதங்கள் நுண் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஆரோக்கியமான குழந்தைகளே நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம்.

மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இத்திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து 6 வயத்திற்கு உட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்திற்கு நடைபெறும்.

இதன்மூலம் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு டையவர்களாக கண்டறியப்பட்டுள்ள குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளில் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் உருவாக் கப்படும்.

தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம், உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய குழந்தைகள் நலனுக்கான, சத்துக்கள் நிறைந்த உணவுத்தொகுப்பு வழங்கும் ‘கண்மணி’ என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கிய நோக்கம்
இதன் முக்கிய நோக்கம், கர்ப்பிணிகள் மற்றும் 0-5 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தி, ஊட் டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளின் இறப்பு மற்றும் கர்ப்பிணிகளின் பேறுகால இறப்பு இல்லாத வளமான சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

ஆரோக்கியமான குழந்தைக்கு கர்ப்ப காலமான 270 நாட்கள், குழந்தையின் முதல் வருடமான 365 நாட்கள், குழந்தையின் இரண்டாம் வருடமான 365 நாட்கள் என முதல் 1000 நாட்கள் மிகவும் முக்கி யமானதாகும்.

அதன்படி, உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய 0-6 மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 200 கிராம் நெய், 200 கிராம் பேரிச்சம்பழம், 250 கிராம் நிலக்கடலை, 160 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டையும், 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 400 கிராம் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவுப்பொருட்கள், 100 கிராம் நெய், 160 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டையும், 3 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 100 கிராம் நெய், 200 கிராம் பாதாம் பவுடர், 240 கிராம் புரதச்சத்து நிறைந்த பிஸ்கட் அல்லது முட்டை, 300 கிராம் கடலைமிட்டாய் உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் நிறைந்த சிறப்பு உணவு தொகுப்புடன் தோட்டக்கலைத்துறை மூலம் கீரை விதைகள் மற்றும் கை கழுவும் திரவம் (Hand Wash) வழங்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில், மொத்தம் 12 வட்டங்களில் உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய 240 குழந்தைகள் மற்றும் வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய 189 குழந்தைகள் என மொத்தம் 429 குழந்தைகள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்தின் அளவை மேம்படுத்தும் விதமாக 15 நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து 3 மாதங்கள் இந்த நுண் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.

15 நாளுக்கு ஒரு முறை
நுண் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கிய பின்பு 15 நாட்களுக்கு ஒருமுறை சம்மந்தப்பட்ட குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு அவர்களின் ஊட்டச்சத்து நிலை முன்னேற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு, அவர்களை ஆரோக்கியமான குழந்தைகளாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதுவரை உயரத்திற்கேற்ற எடை குறைபாடுடைய 100 குழந்தைகளும், வயதிற்கேற்ற எடை குறைபாடுடைய 18 குழந்தைகள் என மொத்தம் 118 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து உணவுகளை தொடர்ந்து பயன்படுத்தியதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மேம்பட்டு உள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து 0-5 வயது குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் எடுக்கப்படுகிறது.

வயதுக்கேற்ற எடை, வயதுக்கேற்ற உயரம், உயரத்திற்கேற்ற எடை ஆகியவை இல்லாத குழந்தைகளின் விவரம், பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு குழந்தைகளிடையே ஏற்படும் குள்ளத்தன்மை மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைப்பதற்கும், தடுப்பதற்கும், குழந்தைகளின் வாழ்நாளில் முதல் ஆயிரம் நாட்களில் ஊட்டச்சத்துகளின் அவசியத்தை எடுத்து கூறி, ஊட்டச்சத்தின் குறைபாட்டை தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உயரத்திற்கு ஏற்ற எடை ஊட்டச்சத்தால் கிடைத்தது
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற குழந்தைகளின் தாய்மார்கள் தெரிவித்தத £வது:
எனது பெயர் முத்துச்செல்வி. நான் குல்லூர்சந்தையில் வசித்து வருகிறேன். எனது குழந்தைக்கு வயது 4 ஆகிறது. அவனுக்கு உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் இருந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் ‘கண்மணி’ திட்டம் மூலம் எனது குழந்தைக்கு ஊட்டசத்து அதிகப்படுத்தும் நோக்கில், நெய், பாதாம் பவுடர், புரதச்சத்து நிறைந்த பிஸ்கட், முட்டை, கடலைமிட்டாய் உள்ளிட்ட ஊட்டசத்து பொருட்களை மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு நேரில் வந்து வழங்கினார்.

அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த ஊட்டச்சத்து பொருட்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டு, எடை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

தற்போது எனது குழந்தையின் எடை சோதித்து பார்த்ததில் உயரத்திற்கேற்ற எடையாக உள்ளது.

எனது குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் ஆரோக்கியமாக உள்ளது. முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

ஆரோக்கியமான வளர்ச்சி
எனது பெயர் நிரோசா. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 3 வயதான குழந்தை உள்ளது. எனது குழந்தைக்கு எடை குறைவாக இருந்தது.
‘கண்மணி’ திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களாக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பெற்று, ஊட்டச்சத்து முறைகளை பின்பற்றி என் குழந்தைக்கு வழங்கி வருகிறேன். தற்போது என் குழந்தையின் எடை முன்பை விட கூடுதலாகி வருகிறது.

தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஊட்டசத்து பொருட்களை பெற்று குழந்தைக்கு வழங்கி வருகிறேன். எனது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, இந்த ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிய முதலமைச்சர் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி என்றார்.

எனது பெயர் நிரோசா. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்களுக்கு 3 வயதான குழந்தை உள்ளது. எனது குழந்தைக்கு எடை குறைவாக இருந்தது.
‘கண்மணி’ திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களாக அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பெற்று, ஊட்டச்சத்து முறைகளை பின்பற்றி என் குழந்தைக்கு வழங்கி வருகிறேன்.

தற்போது என் குழந்தையின் எடை முன்பை விட கூடுதலாகி வருகிறது. தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை ஊட்டசத்து பொருட்களை பெற்று குழந்தைக்கு வழங்கி வருகிறேன்.

எனது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு, இந்த ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிய முதலமைச்சர் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி என்றார்.

படிக்க வேண்டும்

spot_img