Homeபிற செய்திகள்‘கணினி பயன்பாட்டில் தற்கால தொழில்நுட்ப மேம்பாடு’ ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

‘கணினி பயன்பாட்டில் தற்கால தொழில்நுட்ப மேம்பாடு’ ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

கோவை நவ இந்தி யாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதுநிலை கணிதம் மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் கணினி அறி வியல் சி.எஸ்.துறைகள் சார்பில், ‘கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டில் தற்கால தொழில்நுட்ப மேம்பாடுகள்’ என்ற தலைப்பிலான சர்வதேச அளவிலான கருத்தரங்கம், நேற்று (செப்.2) நடைபெற்றது.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கணிதத் துறைத் தலைவர் முனைவர் என்.உமா வரவேற்றார்.

கேப்ஜெமினி பொறியியல் நிறுவன சீனியர் மேலாளர் ஆர்.கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலர் வெளியிட்டு பேசினார்.

கருத்தரங்கில் இந்தியா, அமெரிக்கா நாடுகளில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பேரா சிரியர்கள், மாணவர்கள் இணைய வழியாகவும், நேரிலும் கலந்து கொண்டு, 89 ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் சமர்ப்பித்தனர்.

கருத்தரங்கில் கணினி அறிவியல் சி.எஸ்.துறைத் தலைவர் முனைவர் வி.கிருஷ்ணபிரியா, முனை வர் வி.கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணிதத் துறைப் பேராசிரியர் எம்.மலர்விழி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img