கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பாராட்டி வரவேற்கத்தக்கது.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம் என்று தமிழக அரசு 2019ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
அதன் பிறகு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
கடை திறக்கும் அனுமதி ஆனது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுவதால் கடந்த முறை வழங்கிய அனுமதி இம்மாதம் 8ம் தேதியோடு (நேற்று) முடிவடைந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது கடைகளை 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அதேநேரத்தில் ஊழியர்களின் பணி நலன்கள் காக்கப்பட வேண்டும். குறிப்பாக வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, தினமும் எட்டு மணி நேரம் மட்டுமே பணி, இரவு 8 மணிக்குப் பிறகு பெண் ஊழியர்களை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளையும் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பாராட்டி வரவேற்கத்தக்கது.