fbpx
Homeபிற செய்திகள்ஓ.இ. மில்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு ஓபன் எண்ட்- வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங்...

ஓ.இ. மில்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்நாடு ஓபன் எண்ட்- வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம்(OSMA) மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்திடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) தலைவர் அருள்மொழி மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் தலை வர் பிரீதம் சிங் ஆகியோர் கூறி யதாவது:

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற் கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் நேரடியாகவும், மறை முகமாகவும் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய் யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய் யப்படுகிறது.

அதேபோல் பானிபட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் 250 ஓபன் எண்ட் மில்கள் செயல் படுகின்றன. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப் பட்ட கலர் நூலும் 10 லட்சம் கிலோ கிரே காட்டன் நூலும் உற்பத்தி செய் யப்படுகிறது.

ஓபன் எண்ட் மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்படும் படுக்கை விரிப்புகள், ஜீன்ஸ், தலையணை உறைகள், துண்டு, கிச்சனில் பயன்படுத்தப்படும் துணி வகைகள், பெண்களுக்கான நைட்டி, லெக்கின்ஸ், திரைசீலைகள், டீ சர்ட், பர்முடாஸ் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிப் பொருட்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளித்து வருகிறது.
உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கழிவுப் பஞ்சை பயன்படுத்தி இந்நூல் தயாரிப்பது மட்டுமின்றி பயன்படுத்தப்பட்ட பெட்பாட்டில் மற்றும் பனியன் வேஸ்ட் உள்ளிட் டவற்றை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணியும் ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் மற்றும் வட இந்தியாவில் செயல்படும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கோம்பர் நாயில் என்று சொல்லக்கூடிய கழிவுப் பஞ்சு ரகத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. உள்நாட்டு தேவைக்கு போக மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் மாதம் பருத்தி சீசன் காலத்தில் மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஸ்பின் னிங் மில்களுக்கு நேரடியாக விற் பனை செய்ய வேண்டும்.

ஓபன் எண்ட் மில்களில் பயன் படுத்தப்படும் மெஷின்கள் 100% வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

ஓபன் எண்ட் நூல் வகைகளுக்கு தனியாக ‘HSN CODE’ ஒதுக்கி அதை கெசட்டில் GAZETTE) அறிவிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க இரு சங்கங் களும் இணைந்து நடவடிக்கை மேற் கொள்ளும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img