fbpx
Homeபிற செய்திகள்‘ஓயோ’ தங்குமிடங்களை அதிகரிக்க முடிவு

‘ஓயோ’ தங்குமிடங்களை அதிகரிக்க முடிவு

உலகளாவிய விருந்தோம்பல் தொழில்நுட்பத்தில் பெரிய நிறுவனமான ஓயோ (OYO), முக்கிய சுற்றுலா மையங்களில் அதன் ஓய்வு விடுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

கோடை விடுமுறையில் துவங்கி, கடந்த சில மாதங்களாக புத்துணர்வுக்காக பயணம் மேற்கொள்வது பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த வகை சுற்றுலாவை இலக்காகக் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பொழுதுபோக்கு இடங் களில் 1000-ற்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை (ஸ்டோர்ஃபிரன்ட்) சேர்க்கவுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இது போன்ற 600-க்கும் மேற்பட்ட ஸ்டோர்ஃபிரன்ட்களை ஏற்கனவே அதன் பிளாட்ஃபார்மில் ஓயோ சேர்த்துள்ளது. வரவிருக்கும் பரபரப்பு மிகுந்த சுற்றுலா சீசன் பண்டிகைகளுடன் தொடங்கி குளிர்கால விடுமுறையோடு தொடரவிருப்பதால், தற்போதைய காலெண்டர் ஆண்டின் முடிவிற்குள் 400-க்கும் மேற்பட்ட ஸ்டோர்ஃபிரன்ட்களை சேர்க்க ஓயோ திட்டமிட்டுள்ளது.

4ByOYO, 5ByOYO, OYO டவுன்ஹவுஸ், டவுன்ஹவுஸ் OAK, கேபிடல் O மற்றும் கலெக்ஷன் O ஆகியவை ஓயோவின் முன்னணி ஓய்வு விடுதி பிராண்டுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

5ByOYO விருந்தோம்பல் தொழில்நுட்பத்துறையில் பெரிய நிறுவனமான ஓயோ, இந்தியா முழுவதும் உள்ள சுமார் 19 முக்கிய மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் அதன் ஓய்வு விடுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் இலக்கினைக் கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் தேவைகள் உயர்ந்துள்ளது. எனவே சிம்லா, அமிர்தசரஸ், உதய்பூர், கோவா, மைசூர், திருப்பதி, பூரி, காங்டாக் போன்ற முக்கிய இடங்க ளில் ஓயோ கவனம் செலுத்தி வருகிறது.

ஓயோ நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளைச் சேர்க்கையில் முக்கியமான உள்ளூர் சுற்றுலா பகுதிகள் மற்றும் மக்கள் கூடும் பிரபல இடங்களுக்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது.

குடும்பமாக சுற்றுலா வருவோர், நண்பர்கள், யாத்திரை குழுக்கள் மற்றும் சொந்தமாக சமையல் ஏற்பாடுகளுடன் பயணிக்கும் குறிப்பிட்ட உணவு விருப்பங்களைக் கொண்ட – கிச்சன் சுற்றுலா பிரிவினர் என பல வகையான பயணிகளின் மீது ஓயோ கவனம் செலுத்தி செயல்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இரண்டு வருட இடையூறுகளுக்குப் பிறகு, இந்தியாவில் பயணங்கள் மீண்டும் வழக்கத்திற்கு திரும்பியுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img