முத்துநகர் லாரி ஓட்டுநர் நல சங்கம் சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி ரோச் விக்டோரியா ஹாலில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர் ஜோபிரகாஷ் தலைமை வகித்தார். வஉசி துறைமுக சிஐஎஸ்எப் தளபதி விஸ்வநாத், உதவி போக்குவரத்து மேலாளர் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லாரி ஓட்டுநர் நல சங்க மாவட்ட தலைவர் டி.சகாயம், செயலா ளர் அருண்குமார், முத்து நகர்லாரி ஓட்டுநர் நல சங்கம் கவுரவ தலைவர்கள் அருண், டி.அரவிந்த், எஸ்.தமிழ் செல்வன், எம்.கே.பரத், செயலாளர் டி.ஆனந்த் துணை செயலாளர் எஸ்.அந்தோணி, பொருளாளர் ஒய்.அந்தோணி, ஒருங்கிணைப்பாளர் எம்.மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முத்துநகர் லாரி ஓட்டுநர் நல சங்கம் சார்பில், லாரி ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.