fbpx
Homeபிற செய்திகள்ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை...

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை – அமைச்சர் பேச்சு

தென்னை வாரியம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை என்று தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேற்று “உழவர்கள் கூட்டம்“ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெய ராமன், அம்மன் அர்ஜுனன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது: தென்னை வாரியம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு மாநில அரசால் அதிக உதவி செய்ய முடியவில்லை.

தமிழகத்தில் 41 இடங்களில் கொப்பரை கொள்முதல் செய்கின்றோம் என தெரிவித்த அவர், நாங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டும்தான் செய்ய முடியும்.

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் இந்த அரசு தாக்கல் செய்கிறது, விவசாயத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகின்றது. தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகை யில் வருங்கால பட்ஜெட் இருக்கும்.

25 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை இது வரை கொள்முதல் செய்து இருக்கின்றோம், மத்திய அரசு அனுமதி கொடுத்தால் இன்னும் அதிகமாக கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம்.

ஆண்டு முழுவதிலும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய தயாராக இருக்கின்றோம், மத்திய அமைச்சரிடம் பேசி வானதி சீனிவாசன் அனுமதி வாங்கி தர வேண்டும்.

தென்னை வாரியம் மத்திய அரசிடம் இருப்பதால் விலை நிர் ணயத்தை அவர்கள் செய்கின்றனர், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்யை ரேசன் கடைகளில் விநியோகம் செய்வது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சரிடம் பேசி அதற்கு சாத்தியம் இருக்கின்றதா என பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: ‘விவசாயம் நமது நாட்டின் முதுகெலும்பு. இதை பாதுகாப்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு. தென்னை விவசா யம் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தேங்காய் உற்பத்தில் இந்தியா 3 வது இடத்தில் இருக்கின்றது. இதில் தமிழகம் முக்கிய இடத்தில் குறிப்பாக கோவை முக்கிய இடத் தில் இருக்கின்றது.
இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டேரில் தேங்காய் விவசாயம் நடைபெறுகின்றது. தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை விவசாயம் நடைபெறுகின்றது.

தமிழகத்தில் தென்னை விவசா யத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும். தென்னை விவசாயத்துக்கு எல்லாவிதமான உதவிகள் செய் தாலும், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகின்றது.

அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கின்றது.
கொரொனாவில் அனை வரும் பாதிக்கப்பட்டனர். பிர தமர் மோடியின் முயற்சியால் விவசாயதொழில் பாதுகாக்கப் பட்டது. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

கிஷான் கிரிடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கான கடன் தொகை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img