எம்ஜி மோட்டார் இந்தியா, ரூ.31.99 இலட்சத்தில் ‘அட்வான்ஸ்டு குளோஸ்டர்’ -ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்தியாவின் முதல் ஆட்டோனமஸ் (லெவல் 1) பிரீமியம் எஸ்யூவி (SUV) இப்போது புதிய மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு, ஸ்டைல், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றுடன் வருகிறது.
இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “டீப் கோல்டன்” வண்ண விருப்பத்தில் வழங்கப்படுகிறது. இது ஏற்கனவே இருக்கும் மெட்டல் பிளாக், மெட்டல் ஆஷ், வார்ம் ஒயிட் ஆகிய நிறங்களுடன் கூடுதலாகும்.
எம்ஜி மோட்டார் இந் தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சாபா கூறியதாவது: குளாஸ்டர் வல்லமை மிக்கது, உறுதியானது, பல்திறம் வாய்ந்தது, ஆடம் பரமானது.
அதன் 2 டபுள்யூடி மற்றும் 4 டபுள்யூடி டிரிம்கள், சக்தி வாய்ந்த இன்ஜின் விருப்பங்கள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், ஆட்டோ னமஸ் லெவல் 1, மை எம்ஜி ஷீல்ட் பேக்கேஜ் ஆகியவற்றுடன், ‘அட்வான்ஸ்டு குளோஸ்டர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘அட்வான்ஸ்டு குளோஸ் டர்’ பயணத்தின்போது பொழுதுபோக்கை வழங் குகிறது. இவ்வகைப் பிரிவில் மிகச்சிறந்த 31.2 செ.மீ தொடுதிரை, உயர்தர ஆடியோ சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவுடன் 12 ஸ்பீக்க ர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இவ்வகைப் பிரிவில் முதன்முதலாக ஷார்ட்பீடியா நியூஸ் ஆப் மற்றும் குரல் கட்டளைகள் மூலம் கானா பாடல் தேடல் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.
இந்த எஸ்யூவி 75க்கும் மேற்பட்ட இணைக்கப் பட்ட கார் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் ஸ்மார்ட்-டெக் சேர்ப்புடன் அனைத்திற்கும் முன்னோ டியாக உள்ளது.
6- மற்றும் 7-சீட் விருப்பங் களுடன் 2டபுள்யூடி மற்றும் 4டபுள்யூடி-இல் கிடைக்கும் ‘அட்வான்ஸ்டு க்ளோஸ்டர்’ அதனுடன் ஒப்பிடமுடியாத பிரீமியம் ஆடம்பரத்தையும் சிறந்த- இன்-கிளாஸ் உட்புற இடத்தையும் தருகிறது.
மேம்பட்ட குளோஸ்டர் 180-க்கும் மேற்பட்ட விற் பனைக்குப் பிந்தைய சேவை விருப்பங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட கார் உரிமைத் திட்டமான ‘மை எம்ஜி ஷீல்டு’ (“MY MG SHIELD”)-ஐயும் வழங்கும்.
வாடிக்கையாளர்களுக்கு நிலையான 3+3+3 பேக்கேஜ் வழங்கப் படும். அதாவது, மூன்று ஆண்டுகள் வரம் பெற்ற கிலோ மீட்டர் உத் தரவாதம். மூன்று ஆண்டுகள் சாலையோர உதவி. குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று கட்டணமில்லாத சர்வீஸ் ஆகியவை வழங்கப்படும்.