கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்குவது குறித்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சள் பை ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா, மத்திய மண்டல மாமன்ற உறுப்பினர்கள் வித்யா ராமநாதன், பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர்.