இந்தியாவில் மிக உயர்வாகப் போற்றப்படுகின்ற பிராண்டான சாம்ஸங், இளைஞர்களை மையப்படுத்திய புதிய தேசிய கல்வி மற்றும் புதுமைப் போட்டி யான எதிர்காலத்திற்கான தீர்வின் துவக்கப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்களைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மாற்றியமைக் கின்ற புதுமையான யோசனைகளுடன் இதில் கலந்து கொள்ள வருமாறு ஒளி மிகு இளம் உள்ளங்களை சாம்ஸங் அழைக் கிறது.
எதிர்காலத்திற்கான தீர்வுடன் சேர்ந்து, உலகெங்கிலும் ஜென் இசட் நிறுவனத்தை ஈடுபடுத்துகின்ற ஒரு குடியு ரிமை முன்னெடுப்பையும் கொண்டு, நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு யதார்த்த உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவர்களுடைய யோசனை களை செயல்படுத்துவதற்காக 16-22 வயதுடைய இளைஞர்களுக்கு ஆதர வளிப்பதை நோக்கமாக சாம்ஸங் கொண்டுள்ளது.
முதல் வருடத்தில், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் விவசாயம், இந்தியாவுக்கான ஐ.நாவின் முதன்மை நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவற்றுக்கான யோசனைகளை எதிர்காலத்திற்கான தீர்வு வரவேற்கிறது.
இந்த உதவியானது சிறந்த 50 குழுக்களுக்கு (தனிநபர்கள் அல்லது 3 உறுப்பினர்கள் வரையுள்ள குழுக்கள்), டெல்லியில் உள்ள ஐஐடியில் துவக்க-முகாம், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் வடிவமைப்பு சிந்தனை, ஸ்டெம், புதுமை, தலைமைத்துவம் போன்றவற்றில் ஆன்லைன் படிப்புகளுக்கான 100,000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர்கள் இருக்கும்.
தேசிய அளவிலான மூன்று வெற்றியா ளர்கள் குறித்த பிரமாண்டமான அறிவிப் புடன் வருடாந்திர நிகழ்ச்சி நிறைவடையும்.
பங்கேற்பாளர்கள் எதிர்காலத்திற்கான தீர்வுக்கு விண்ணப்பிக்கலாம், திட்டம் குறித்தும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்தும் விரிவான விவரங்களை ஜூலை 31, 2022 மாலை 5 மணி வரை லீttஜீ://ஷ்ஷ்ஷ்.sணீனீsuஸீரீ.நீஷீனீ/வீஸீ/sஷீறீஸ்மீயீஷீக்ஷீtஷீனீஷீக்ஷீக்ஷீஷீஷ் என்ற இணையதளத்தில் காணலாம்.
சாம்ஸங் தென்மேற்கு ஆசியா தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கென் காங் கூறுகையில், எதிர்காலத்திற்கான தீர்வு, இந்த தேசத்தின் வலிமை வாய்ந்த கூட்டாளராக, ‘டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்துதல்’ என்ற கண்ணோட்டத்தில் எங்களை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது என்றார்.
ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் ரங்கன் பானர்ஜி கூறுகையில், இந்தக் கூட்டணி, மாற்றங்களை உருவாக்கும் இளைஞர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை ஆராய்வதற்கான வாய்ப் பையும், தங்கள் யோசனைகளை செயல்படுத்துவதற்கான மற்றும் செழுமைப் படுத்துவதற்கான ஒரு தளத்தையும் அளிக்கும் என்றார்.