அரசின் திட்டப் பணிகளுக்கு பெரிய பட்டினம் ஊராட்சிக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், ஊராட்சி பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிநபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறு த்தியும் திருப்புல் லாணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, துணைத்தலைவர் பெரோஸ் கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்ப ட்டது.
இதை தொடர்ந்து ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெரிய பட்டினம் ஊராட்சி கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான முறையில் மக்கள் பணி செய்து வருகிறோம்.
இந்நிலையில் பெரி யபட்டினம் ஊராட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் பணியை தொடர்ச்சியாக செய்ய கூடாது என்றும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.
ஆகவே, அவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பெரியபட்டினம் ஊராட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட ஆவன செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறிப்பிட்ட நபர் மீது ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் போலீசில் புகார் செய்யப்படும் என்று ஆணையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.