fbpx
Homeபிற செய்திகள்‘உளி தீண்டா கல்லோவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

‘உளி தீண்டா கல்லோவியம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் கவிஞர் ஆ.மாரிமுத்து எழுதிய உளி தீண்டா கல்லோவியம் கவிதை நூல் வெளியீட்டு விழா இந் தியன் சேம்பர் அருகில் உள்ள பாம்ஸ் அகாடமி அரங்கத்தில் நாசரேத் தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஷ்வரூபன் தலைமையில், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்ற மாவட்ட தலைவர், முனைவர் அருட் சகோதரி எழிலரசி முதல் நூலை வெளியிட்டார்.

மூக்குப்பேறி கிராமப் புறத் தமிழ்மன்ற தலைவர் கவிஞர் தேவதாசன் அதனைப் பெற்றுக் கொண்டார்

கோவில்பட்டி முது கலைத் தமிழாசிரியர் கவி ஞர் தங்கத்துரையரசி, திரு நெல்வேலி கவிஞர் சக்தி வேலாயுதம், தூத்துக்குடி எழுத்தாளர் வருணன் கவிதை நூலைத் திறனாய்வு செய்தார்கள்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் எழுத்தாளர் பிரபாகர், தூத்துக்குடி ஏபிசி மகாலெட்சுமி கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி, தூத்துக்குடி சிப்காட் தனி வட்டாட்சியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நூலா சிரியரும் கவிஞரு மான மாரிமுத்து ஏற்புரையாற்றினார்.

நிகழ்வை தொடு வானம் இதழ் ஆசிரியர் கவிஞர் நெல்லை தேவன் தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img