fbpx
Homeபிற செய்திகள்உலக மகளிர் தின விழாவில் ஏழைப் பெண்களுக்கு நலஉதவிகள்

உலக மகளிர் தின விழாவில் ஏழைப் பெண்களுக்கு நலஉதவிகள்

கோவை காந்திபுரம் ப்ளூ ஸ்டார் ஹோட்டலில் உலக மகளிர் தின விழா டிஎன்டிஎஸ்சி இ சர்வீசஸ் சார்பாக நடைபெற்றது. இதனை நிர்வாக இயக்குனர் முருகன், பெண்களுக்கு உலக மகளிர் தின வாழ்த்துக்களை கூறி தொடங்கி வைத்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக காட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். எஸ்ஓஎஸ் காவலன் செயலி பற்றி அவர்கள் விரிவாக பேசினார்கள்.

பெண்களை குறிவைத்து தொடரும் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் விழாவில் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முனைவர் அன்புச்செல்வி மற்றும் ஊட்டி பப்ளிக் ஸ்கூல் பிரின்சிபல் மீனாட்சி ஆகியோர் பேசுகையில் பெண்கள் தங்கள் வலிமையை பற்றி அறிந்து கொள்வதற்கான செயல்பாடுகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.

மேலும் விழாவில் 20 ஏழை குடும்பத்தினர், 5 மாற்றுத்திறனாளிகள், இரண்டு ஆம்புலன்ஸ் சேவை பணியாளர்கள் உட்பட 27 பெண்களுக்கு அரிசி, வேஷ்டி சேலை, காட்டன் நாப்கின், மாஸ்க் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது.

5 முதியவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான இட்லி பாத்திரம் மற்றும் பூக்கடை டேபிள் வழங்கப்பட்டது. மற்றும் கோவை கணுவாய் அபயா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 28 பெண் குழந்தைகளுக்கு தேவையான பள்ளி பொருட்கள் வழங் கப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை செய்து கொண்டிருக்கக் கூடிய பெண்களுக்கு விருதும் வழங்கப்பட்டது
விழாவின் இறுதியில் அனைவருக்கும் விருந்து மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img