fbpx
Homeபிற செய்திகள்உலக தொழில்முனைவோர் தினம் சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியில் கொண்டாட்டம்

உலக தொழில்முனைவோர் தினம் சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியில் கொண்டாட்டம்

சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியின் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் செல் (IIC), சவீதா டிரான்ஸ்-டிசிப்ளினரி தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பூங்கா (STEP-UP) ஆகியவை இணைந்து மாணவரிடையே தொழில்முனைவோராகும் எண்ணத்தை மேம்படுத்தவும் அத்தகைய மனப்பான்மையை அங்கீகரிப்ப தற்காகவும் பல்வேறு நிகழ்வுகளுடன் உலக தொழில்முனைவோர் தினத்தை கொண்டாடின.

இந்நிகழ்ச்சியை மேம்படுத்தும் வகையில், டாக்டர் பாலயஷ்வந்த் ராம் வும்மிடி, விஞ்ஞானி மற்றும் நிறுவனர் இங்கர் தெரபியூட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாக்டர் எஸ். ஜெயக்குமார், ஐஐடிடிஎம் போன்ற பிரபல தொழில்முனைவோர்கள் இந்தியாவின் தன்னிறைவுக்கு இளம் தொழில் முனைவோர் எவ்வாறு பங்களிக்க முடியும் என்னும் தலைப்பில் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மாணவர்களின் கட்டுரைகள், சுவரொட்டிகள், புதிய தயாரிப்புகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மாணவர்களின் புதுமையான அம்சங்களை வெளிப்படுத் தியது மற்றும் தொழில்முனைவு பற்றிய அவர்களின் எண்ணங்களை விளக்கியது.

நிகழ்வில் அமைக்கப்பட்ட அரங் குகளில் ஒரு சில சுய உதவிக்குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்ப டுத்தினர். அவர்களுடன் சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியின் இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் ஸ்டெப்அப் அமைப்பின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தின.
சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சிறந்த அரங்குகளை அமைத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மத்தியில் புதுமை மற்றும் தலைமைத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததற்காக, கல்லூரியின் நிறுவனர் மற்றும் வேந்தர், டாக்டர் என். எம். வீரைய்யன், இயக்குனர் டாக்டர் ரம்யாதீபக் ஆகியோருக்கு சிமேட்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img