fbpx
Homeபிற செய்திகள்உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 2 நபருக்கு பசுமை சாதனையாளர் விருது-தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 2 நபருக்கு பசுமை சாதனையாளர் விருது-தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை திறம்பட செய்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு பசுமை சாதனையாளர் விருது மற்றும் ரூ.1 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்த தமிழக அரசு சார்பில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர் பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உட்படுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், நெகிழி கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் தொழிற்சாலைகள், தனிநபர்கள், தன்னார்வலர்கள், பள் ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகள் ஆகியோருக்கு தகுதியானவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் பெறப்பட்டன.

சாதனையாளர் விருதிற்கு மாவட்ட அளவிலான விருது குழுவின் மூலம் பெறப் பட்ட விண்ணப்பங்களிலிருந்து 2 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டு, வாரிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட அ.சிலம்பரசன் (ஊராட்சி மன்ற தலைவர், ஏர்ரபையனஅள்ளி ஊராட்சி, நல்லம்பள்ளி ஒன்றியம்) தரிசாக இருந்த அரசு புறம்போக்கு நிலம் 42 ஏக்கரில் 10,000 மரக்கன்றுகள் நட்டு பழத்தோட்டம் அமைத்துள்ளார்.

அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஊராட்சியின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார். மற்றும் மு.சங்கர் (ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, பாலவாடி, நல்லம்பள்ளி ஒன்றியம்) பாலவாடி அரசு உயர்நிலை பள்ளியில் 1161 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் 80000க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை வளர்த்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகிறார். 2 பேருக்கும் பசுமை சாதனையாளர் விருது மற்றும் ரூ.1 லட் சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை (பொறுப்பு) பி.பாபு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற் றுச்சூழல் பொறி யாளர் முனைவர் ஆ.சாமுவேல் ராஜ் குமார், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற் றும் தனித்துணை ஆட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img