உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோ.குப்பு சாமி நாயுடு நினைவு மருத்துவ மனை மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஒன்றுசேர்ந்து ஆரோக்கியமான இதயம் போன்ற கை அசைவினை வெளிப்படுத்தும் வகையி லான உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனையை நிகழ்த்தினர்.கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை தாங்கி, பேசினார்.
கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி வரவேற்றார்.
கோ.குப்புசாமி நாயுடு நினைவு (ஜிகேஎன்எம்) மருத்துவமனையின் 500-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர்.
உலக சாதனை அமைப்பின் அலுவலக பதிவுகள் மேலாளர் கிரிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட், உலக சாதனை சான்றிதழை, மருத்துவ மனையின் முதன்மை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமியிடம் வழங்கினார்.
இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி துறைத் தலைவர் டாக்டர் ராஜ்பால் கே.அபய்சந்த் தலை மையில், ஆரோக்கியமான இதயத்திற்கான உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் கலந்து கொண்டார்.
கார்டியோதொராசிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பி.சந்திர சேகர் நன்றி கூறினார்.