உத்தராகண்ட் மாநிலத்தில் விபத்தில் உயிரிழந்த கோவை பத்திரிக்கையாளருக்கு கோவை மாவட்ட பத்தி ரிக்கையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி. மாவட்ட ஆட்சியரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று முன்தினம் உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரிக்கு 14 பேர் வேனில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் கோவையை சேர்ந்த தனியார் ஆங்கில நாளிதழின் (தி இந்து) செய்தியாளர் கார்த்திக் மாதவன்(45) உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.கார்த்திக் மாதவனின் உயிரிழப்புக்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித் துள் ளனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள், செய்தி நிருபர்கள் ஒளிப்பதிவாளர்கள் பலரும் கலந்துகொண்டு மெழு குவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரனும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.