fbpx
Homeபிற செய்திகள்‘உத்தரவாதத்துடன் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை சென்னை புரோமெட் மருத்துவமனையில் அறிமுகம்

‘உத்தரவாதத்துடன் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை சென்னை புரோமெட் மருத்துவமனையில் அறிமுகம்

உலக இதய தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவ மனையான புரோ மெட் மருத்துவமனை இதய ரத்த நாள பாதிப்பு க்கு நாட்டிலேயே முதன் முறையாக ‘உத்தரவாத த்துடன் கூடிய ஆஞ்சி யோபிளாஸ்டி’ சிகிச்சை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

‘உத்தரவாதத்துடன் கூடிய ஆஞ்சியோபிளாஸ்டி’ திட்டம் குறித்து மருத்துவமனையின் இயக்குனரும், தலைமை இதய நோய் நிபுணருமான டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் பேசியதாவது:
அமெரிக்காவில் பயிற்சி பெற்றபோது இந்த திட்டம் குறித்து அறிந்தேன். உத்தரவாதத்துடன் கூடிய ஸ்டென்ட் திட்டத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிகிச்சை முடிந்த ஒரு வருடத்திற்குள் ஸ்டென்ட் தொடர்பாக ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் நோயாளிக்கு எந்தச் செலவும் இல்லாமல் மருத்துவமனையே மேற்கொள்ளும் என்றார்.

ஆசிய பசிபிக் சிடிஓ கிளப் இயக்குனராக நியமிக்கப்பட்டது குறித்து, டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் கூறுகையில், இந்த பதவியை பயன்படுத்தி, எதிர்கால ஆராய்ச்சி முயற்சிகளுக்கான வரைபடத்தில் இந்தியாவை முன்னிலைப்படுத்தவும், இதய நோய் சம்பந்தமான சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கவும் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்றுவேன் என்றார்.

மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் பேசுகையில், உலக அளவில் நிகழும் இறப்புகளில் இதய நோயும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில், 24.8 சதவீத இறப்புகளுக்கு இதயநோய் காரணமாக உள்ளது. இருப்பினும், நம் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இதில் பாதியை நம்மால் தடுக்க முடியும் என்றார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், டி.எஸ். ஜவஹர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திருப்பதி முன்னாள் எம்.பி.யும், கூடூர் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் வெலகபள்ளி வரப்பிரசாத ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிடிஓ கிளப்பில் இதயத்திற்கு செல்லும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்த நாளங்களில் பகுதி அல்லது முழுமையாக அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் அதற்கான நுண்துளையிட்டு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img