fbpx
Homeபிற செய்திகள்உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 8 முதல் 13 வரை இந்தியா ஐடிஎம்இ ஜவுளி தொழில் கண்காட்சி- திருப்பூர்...

உத்தரபிரதேசத்தில் டிசம்பர் 8 முதல் 13 வரை இந்தியா ஐடிஎம்இ ஜவுளி தொழில் கண்காட்சி- திருப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு

ஜவுளி துறையில் பாரம்பரிய மற்றும் நவீன போக்கை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை லாப நோக்கமில்லாத அமைப்பான இந்திய ஐடிஎம் அமைப்பு உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்திய ஐடிஎம் இ கண்காட்சியை இந்தியா எக்ஸ்போசிஷன் மார்ட் நிறுவனத்தில் ஆறு நாட்கள் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

அதற்காக செய்திய £ளர்கள் சந்திப்பு திருப்பூர் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சொசை ட்டியின் பொருளாளர் கேதன்சங்வி கூறியதாவது:

இந்திய ஜவுளித் துறையானது சப்ளையர்கள் உடன் நேரில் இணைவதற்கும் அதிகரி த்து வரும் ஏற்றுமதி தேவைகளை பூர்த்தி செய்ய போட்டித் தன்மை வாய்ந்த ஆதாரங்களை ஆராயும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம்.

2022 ஆம் ஆண்டு நடைபெறும் கண்காட்சி உயர் தொழில்நுட்பம் மிக்க ஜவுளி எந்திரங்களை புதுமையாக தொழில்நுட்பங்கள் மற்றும் ஜவுளி துறைக்கான சேவைகளை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இருக்கும்.

இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வழங்கப்படும் மிகப்பெரிய சந்தை வாய்ப்பிற்கான நுழைவு வாயிலாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது 235.000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற இருக்கிறது.

இதில் ஏராளமான தொழில்நுட்ப மற்றும் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இந்தியாவில் டிசம்பர் மாதத்தின் அழகான குளிர் காலத்தை அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். திருப்பூர் ஜவுளித்துறை நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img