fbpx
Homeபிற செய்திகள்உதயநிதி ஸ்டாலின் மன்ற திறப்பு விழா

உதயநிதி ஸ்டாலின் மன்ற திறப்பு விழா

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக சுகுணாபுரம், கோவைபுதூர் ஆகிய பகுதி களில் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக கோவை மாநாகராட்சி பகுதிகளில் பல் வேறு நலத்திட்டங்கள் வழங்குவது, புதிய உறுப்பினர் சேர்க்கை,மற்றும் பல்வேறு இடங்களில் மன்றத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை 92 வது வார்டு சுகுணாபுரம் பகுதியில் நற்பணி மன்றத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் கோவை மாவட்ட தலைவர் இருகூர் உதய பூபதி, மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்ற இதில், மாநகர செயலாளர்கள் முனிப்பாண்டி, மனோஜ்,பாலசுப்பிரமணியம், கோகுல், விகாஷ்,யமுனேஷ் மற்றும் எம்.பி.மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க.தீர்மான குழு மாநில இணைசெயலாளர் முத்துச் சாமி மற்றும் காஞ்சனா பில்லத்தி, ஆர்.ஜே.பாலு,மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் 92 வது வார்டு தலைவர் முகம்மது ஷாஹீர், செயலாளர் ஹரி கிருஷ்ணதாஸ், பொருளாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேபோல கோவைபுதூர் 90 வது வார்டு பகுதி யில் மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வழங்கப்பட்டது. கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 90 வது வார்டு நிர்வாகிகள் பிரவீன், கஜினி, ராஜீவ் மற்றும், விக்டர் ரவி, ரமேஸ், ருக்துதீன், நௌஃபல், இம்ரான், விஜய்சாம், விவின், பாசில், அப்சல், ஸ்ரீராம், பால சுப்ரமணியம், ஆண்ட்ரூ, மற்றும் மன்ற நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img