fbpx
Homeபிற செய்திகள்உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு

உதகை ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கு

உதகை ஜே.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு இன்று நிறைவடைகிறது.
இன்றைய மருந்தியல் துறையில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பங்கு என்ற தலைப்பில் தொடங்கியது.

கருத்தரங்கை கல்லூரியின் வேதியியல் துறையும் ஒபேரண்ட் பார்மசி பெடரேஷன் என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி துறையின் தலைவரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான முனைவர் ஆர்.காளிராஜன் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் கருத்தரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினார். ஒபேரண்ட் பார்மசி பெடரேஷன் நிறுவனர் விக்ரம் சௌத்ரி அமைப்பின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார்.

ஜே.எஸ்.எஸ். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் மஞ்சுநாதா தலைமை தாங்கி பேசினார்.

குஜராத் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நவீன் சேத் பேசும்போது, 1930 ஆண்டுக்குப் பின்பு அறிவியல் துறையில் நோபல் பரிசு இந்தியா பெறாமல் இருப்பதற்கு காரணங்களை விளக்கினார்.

கல்லூரி மாணவர்கள் அறிவியல் பூர்வமான சிந்தனைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
விழா மலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.

கல்லூரியில் ஆராய்ச்சி மாணவர்கள் சார்பாக குன்னூர் ஸ்ரீ ஹெர்பல் நிறுவனத்திற்காக புதிதாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூலிகைகளிலான மூன்று அழகு சாதனப்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஜுபீ நன்றி கூறினார்.
கருத்தரங்கில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 135 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img