நீலகிரி மாவட்டம் உதகை குட் ஷெப்பர்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 70-வது ஆண்டு தடகளப் போட்டிகள் கடந்த வாரம் 3 நாட்கள் நடந்தன.
ஆங்கில மொழி பேசும் நீலகிரி, கொடைக்கானல் பள்ளித் தலைமைகளின் சங்கம்(Association of the Heads of the English-Speaking schools of the Nilgris, Kodaikanal) சார்பாக இப்போட்டிகள் நடந்தன.
இச்சங்கத்தில் உள்ள 31 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இத்தகைய போட்டிகள் மாணவர்களின் மன வலிமையை வெளிப்படுத்த உதவியது.
அனைத்து சங்கப் பள்ளிகளின் தலைவர்கள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.
வெலிங்டன் பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரீக்ஸ் மெமோரியல் பள்ளித் தலைமை ஆசிரியரும், சங்கத் தலைவருமான கே.சரவணா சந்தர் வரவேற்றார்.
கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர். குன்னூர் செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.
ஊட்டி நாசரேத் கான்வென்ட் பள்ளி மாணவிகள் முதலிடத்தையும், செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவிகள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர்.
மாணவர்கள் பிரிவில் 14 வயதுக்குட்பட்டோரில், எஸ்.சர்வேஸ், 17 வயதுக்கு உட்பட்டோரில் சவான் எஸ்.ரெஜினால்ட், மாணவிகள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோரில் எஸ்.ஹர்ஷ நேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் எம்.கரீஷ்மா, தனி நபர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஜூட்ஸ் பள்ளியைச் சேர்ந்தோர் சிறப்பிடம் பிடித்தனர்.
பள்ளித் தலைவர் டாக்டர் பி.பி.தனராஜன், நிர்வாக இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன் ஆகியோர் வெற்றி பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் சரோ தனராஜன் மாணவர்களையும், பயிற்சியாளர்கள் பிரபு, வனஜா சேகர் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.