fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 42-வது பொதுப் பேரவைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 42-வது பொதுப் பேரவைக் கூட்டம்

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 42-வது பொதுப் பேரவைக் கூட்டம் பவானி பவிஷ் பார்க் கூட்ட அரங்கில் நடந்தது.
கணக்குப் பிரிவு மேலாளர் ஏ.ஆர்.சக்திவேல் வரவேற்றார்.

இணைப்பதிவாளர் மேலாண்மை / இயக்குநர் (மு.கூ.பொ) க.ராஜ்குமார் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

வங்கி பொது மேலாளர் எஸ். ஜானகிராமன் ஆண்டறிக்கை வாசித்தார். வங்கித் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.

அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் குத்துவிளக் கேற்றினார். கோபி சட்டமன்ற உறுப் பினர் கே.ஏ.செங்கோட்டையன் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் ஜி.செந்தில்குமார், கோபி சரக துணைப்பதிவாளர் ப.கந்தராஜா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, திருப்பூர் சரக துணைப் பதிவாளர் ஏ.பி.முருகேசன், வங்கி முதன்மை வருவாய் அலுவலர் இரா.இராமநாதன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி.அசோக் குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், வங்கி இயக்குநர் இரா.மனோகரன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் புதூர் கலைமணி மற்றும் வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img