ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய, காலாண்டிற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய் வுக்குழு கூட்டம் நடந்தது.
வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலை மை தாங்கி பேசியதா வது:
நடப்பு ஆண்டில் தொடக்கத்திலிருந்தே அனைத்து வகைக் கடன் களையும் அதிகளவில் வழங்கிட வேண்டும்.
கேசிசி திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்பிற்கு நடைமுறை மூலதனக் கடன்கள் அதி களவில் வழங்க வேண்டும்.
சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வேண்டும். 5 கோடிக்கும் குறைவாக கடன் நிலுவை உள்ள சங்கங்களின் கடன் நிலுவையினை உயர்த்த வேண்டும் என்றார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் கூடுதல் பதிவாளர் (பொ) கோ.செந்தில்குமார், ஈரோடு மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் முதன்மை மேலாளர் என்.புருஷோத்தமன், வங்கி முதன்மை வரு வாய் அலுவலர் இரா.ராமநாதன், கோபி சரகத் துணைப்பதிவாளர் ப.கந் தராஜா, ஈரோடு சரகத் துணைப் பதிவாளர் கு. நர்மதா, திருப்பூர் சரகத் துணைப்பதிவாளர் ஏ.ப்பி.முருகேசன், வங்கி பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், கூட்டுறவுத் தணிக்கை துணை இயக்குநர் ஷீபா, கூட்டுறவுத் தணிக்கை உதவி இயக்குநர் கி.ஹரிஹரன், ஊட்டி கூட்டுறவுத் தணிக்கை அலுவலர் திருமலைக்கண்ணன், தாராபுரம் சரகக் கூட்டுறவு சார்பதிவாளர் தே.சுமித்ரா, ஈரோடு கைத்தறி அலு வலர் நா.ஜானகி, திருப்பூர் கைத்தறி ஆய்வாளர் கு.அங்கமுத்து, வங்கியின் உதவிப் பொதுமேலாளர்கள், வங்கிப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.