fbpx
Homeபிற செய்திகள்இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

சூலூர் தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலவச சைக்கிள்களை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி வழங்கினார். தலைமையாசிரியர் செந்தூரன் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் குமரவேல், கண்ணம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அங்கமுத்து, கண்ணம்பாளையம் அதிமுக நகரச் செயலாளர் சிவகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் மௌனசாமி, கவுன்சிலர்கள் செல்வராஜ், பத்மநாதன், முத்து சீனி மற்றும் அனைத்து வார்டு கவுன்சி லர்களும் கதிர்வேல், ஆறுச்சாமி, ராதாகிருஷ்ணன், முருகானந்தம், ராஜகோபால், பசுபதி, ரமேஷ் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசி ரியர்களை கௌரவிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ மாணவியரின் பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படிக்க வேண்டும்

spot_img