இருதய அறுவை சிகிச் சைக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் தர்மபுரி ரோட்டரி அரங்கில் நடைபெற்றது.
தர்மபுரி ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் மணிப்பால் மருத் துவமனை சார்பில் நடை பெற்ற இந்த முகாமை இருதய அறுவை சிகிச் சை நிபுணர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வினோத் சுப்ரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். இந்த மருத்துவ பரிசோதனையின் போது இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்க ளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் சக்திவேல், செயலாளர் தட்சிணாமூர்த்தி, பொருளாளர் கருணாகரன் மற்றும் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.