இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஸ்டீல் விலை டன்னுக்கு ரூ.8 ஆயிரம் வரை குறைந்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உற்பத்தி தொழில்துறையில் பயன் படுத்தப்படும் மூலப் பொருட்களில் முக்கிய பொருளாக ஸ்டீல் உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன் ஒரு டன் 45 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மெல்ல உயரத் துவங்கியது.
ஒரு கட்டத்தில் தொழில்துறையினர் மிகுந்த நெருக்கடியை எதிர் கொள்ளும் அளவுக்கு ஒரு டன் ஸ்டீல் விலை 74 ஆயிரம் ரூபாய்க்கு உயர்ந்தது. இந்த அபரிமிதமான விலை உயர்வு எதிர் கொள்ள முடியாமல் குறிப்பாக குறு சிறு நடுத்தர பிரிவைச் சேர்ந்த தொழில் நிறு வனங்கள் தவித்து வந்தன.
ஸ்டீல் உள்ளிட்ட அனைத்து மூலப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என நாடு முழுவதும் பல்வேறு தொழில் அமைப்பினர் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
உற்பத்தி நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இத்த கைய சூழ்நிலையில் சமீபத்தில் ஸ்டீல் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் வரியை மத்திய அரசு அதிகரித்தது. தவிர வெளிநாடுகளில் இருந்து ஸ்டீல் பொருளை இறக்குமதி செய்யவும் அனுமதி அளித்தது.
இதன் காரணமாக உள்நாட்டில் ஸ்டீல் விலை மே மாதத்தில் ஒரு டன் 74 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 66 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பு தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறக்குமதிக்கு அனுமதி
தமிழ்நாடு குறு, சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பானTANSTIA) துணைத்தலைவர், சுருளிவேல் கூறியதா வது: உற்பத்தி தொழில்துறையில் ஸ்டீல் முக்கிய மூலப்பொருள் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஸ்டீல் விலை அதிகரித்து வந்த காரணத்தால் ‘எம்எஸ்எம்இ’ தொழில் துறையினர் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர்.
மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ஸ்டீல் பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் வரியை உயர்த்தியும், இறக்குமதிக்கு அனுமதி அளித்தும் நடவ டிக்கை மேற்கொண்டது.
இது நாடு முழுவதும் தொழில்துறையினர் மத்திய அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை ஆகும். எனவே மத்திய அரசு இந்த கோரிக் கையை நிறைவேற்றிய காரணத்தால் தற்போது ஸ்டீல் விலை டன் ஒன்றுக்கு 8,000 ரூபாய் வரை குறைந்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலையில் மாற்றம் கூடாது
கோவை குறு சிறு பவுண்டரி தொழில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது: ஸ்டீல் விலை குறைந்துள்ளது தற்காலிக மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மூலப்பொருட்கள் விலை குறிப்பிட்ட கால இடைவெளி வரை மாற்றம் செய்யக்கூடாது. இதனால் ஜாப் ஆர்டர் பெறுவதில் அதிக சிரமத்தை தொழில்துறையினர் சந்திக்க நேரிடுகிறது.
மத்திய அரசு மூலப்பொருட்கள் விலை குறைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது வரவேற்கத்தக்கது என்றபோதும் எதிர்வரும் நாட்களில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே விலை இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் தொழில் துறையினர் மிகுந்த பயன் பெற வாய்ப்பு ஏற்படும். இரண்டாண்டு போராட்டங்களால் தற்போது தொழில் துறையினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்