தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மனித வாழ்க்கைக் கும் பேருதவியாக உள்ளது. குறிப் பாக விவசாயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பறியது.
எனவே, தோட்டம் விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாறாக, இயற்கை பூச்சி உரங்களை பயன்படுத்தலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினத்தை (மே 20) முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி யினை, ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார்.
தேனீக்கள் மூலம் பெறப்படும் பயன்பொருட்களான தேன், மெழுகு, மெழுகினால் செய்யப் பட்ட பொருட்கள் தேனீப் பெட்டி, தேன் பிரித்தெடுக்க உதவும் கருவிகள், பாதுகாப்பு உபக ரணங்கள் அனைத்தும் கண்காட்சி அமைக்கப்பட்டு தேனீ வளர்க்கும் விவசாயிகள் பார்வைக்கு வைக் கப்பட்டிருந்தன.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேனீ வளர்க்கும் விவசாயிகளுடன், தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசியதா வது:
தேனீக்கள் பற்றிய விழிப்பு ணர்வை அடுத்த தலைமுறைக்கு கற் றுக்கொடுக்கவும், அதன் வளர்ப்பு, தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக் களை கொண்டாடும் வகையில் நவீன தேனீ வளர்ப்பு உத்திகளுக்கு முன்னோடியாக இருந்த ஸ்லோவேனியாவை சார்ந்த ஆன்டன் ஜான்சாவின் பிறந்த நாளான மே 20, மிகக் கடினமாக உழைக்கும் தேனீக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கையாளர்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களின் பாதுகாப்பை வலியுறுத்தவும், தேனீ வளர்ப்பு விழிப்புணர்வு மற்றும் தேனீ மூலம் பெறப்பட்ட பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் இத்தினம் உள்ளது.
தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது மனித வாழ்க் கைக்கும் பேருதவியாக உள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பறியது. மகசூல் அதிகரிப்பில் தேனீக்களின் பங்கு மிக அதிகம்.
இயற்கையான முறையில் விதைகள் உருவாகாத தாவரங்களில் விதை உற்பத்தியினை அதிகரிக்க முக்கிய பங்கினை வகிக்கிறது. தேன் எடுப்பதன் மூலமும் தேன் பூச்சியிலிருந்து கிடைக்கும் ராயல் ஜெல்லி, தேன் மெழுகு ஆகியவற்றின் மூலமும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
பூச்சிக்கொல்லிகளை பயன்ப டுத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகள் இறப்பது மட்டுமின்றி, மகரந்தத்தினை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம் விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாறாக இயற்கை பூச்சி உரங்களை பயன்படுத்தலாம்.
தேனீ வளர்ப்போர் அனை வரும் தேசிய தேனீ வாரியத்தின் மதுக்கிராந்தி என்ற இணையதளத் தில் பதிவு செய்வதன் மூலம் தேனீ வளர்ப்போர் மற்றும் தேன் கிடைக்கும் விவரங்களை எளி தாக அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் மூலம் வரும் காலங்களில் பயனடைய இந்த இணையதளத்தில் பதிவு செய்தல் மிகவும் அவசியமாகும். தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து, அதன் வளர்ப்பு, தேவையின் முக்கி யத்துவத்தை உணர்த்த வேண்டும்.
தேனீ வளர்ப்புக்கு தேவை யான பெட்டிகள் தற்போது மார்த்தாண்டம் மற்றும் கன்னி யாகுமரி மாவட்டத்தில் உருவாக் கப்படுகின்றன. அதனை கோவை மாவட்டத்தில் உருவாக்க வழிவகை செய்ய தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, தமிழ்நாடு விவசாய சங்கத் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.