இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் வீரபாண் டியனை கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகரச் செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசும் போது, தேசிய குழு உறுப்பினர் வீரபாண்டி யனை கொலை செய்ய முயற்சித்த சமூக விரோதிகளை, உடனடி யாக கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினார். மாவட்ட குழு உறுப்பின ர்கள் சுப்பிரமணி, சுப்பை யா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.