இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் தேசியக் குழு உறுப்பினருமான மு.வீரபாண்டியன் மீது சமூக விரோதிகளால் கொலைவெறித் தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
இதைக் கண்டித்து நேற்று மாலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி.சிவசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஜே.ஜேம்ஸ், மு.வா.கல்யாணசுந்தரம், சி.தங்கவேல், கே.ரவீந்திரன், ஏ.சுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் பிரபா ரவீந்திரன், சாந்தி சந்திரன், எம்.டி. மோகன், மற்றும் கே. எம்.செல்வராஜ், வழக்கறிஞர்கள் எஸ். ராதாகிருஷ்ணன், கே. சுப்பிரமணியம், ஏஐடியுசி செயலாளர் என்.செல்வராஜ், சோமசுந்தரம், மாணவர் பெருமன்ற மாநில தலைவர் எம். குணசேகர், கலை அஸ்வினி, அனைத்து இந்திய இளைஞர் ஒரு மன்றத்தின் கோவை மாவட்ட செயலாளர் வே. வசந்தகுமார், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பி. முருகன், மாவட்ட செயலாளர் ஏ. அஷ்ரப் அலி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி, ஜே.கலா, பி.இளங்கோ, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் பூர்ணிமா நந்தினி, மாவட்ட செயலாளர் பவன் குமார், ஜோதீஸ்வரி, வி.ஆர்.பாண்டியன், பூபதி, சக்திவேல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.