இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர் இழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரியில் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.பி. பாரிமோகன், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப் பினர் பெரியசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வன்னியர் சங்க கிழக்கு மாவட்ட செயலாளர் நாக ராஜன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாவட்ட செய லாளர் எஸ்.பி. வெங்க டேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகி களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது 21 பேர் தங்களது உயிர்களை இழந்து 108 சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று அந்த சமுதாயத்தினர் தற்போது கல்வி, வேலைவாய்ப்பு மற் றும் பொருளாதாரத்தில் முன்னேறி வருவதை அவர் எடுத்துக் கூறினார்.
இதைத் தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. நிர்வாகிகள் அனைவரும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் முனுசாமி, மாவட்ட தலைவர் செல் வகுமார், மாவட்டத் துணை செயலாளர்கள் டி.ஜி.மணி, காமராஜ், மனோகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வணங்காமுடி, திருவேங்கடம், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகிகள் வாசுநாயுடு, சின்னசாமி, சிவக்குமார், சரவணகுமாரி, நகர செயலாளர்கள் சத்திய மூர்த்தி, வெங்கடேசன், ஒன்றிய தலைவர் வெங் கடேசன், ஒன்றிய செய லாளர் சக்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.