கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன் றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட தந்தை பெரியார் பெயரில் முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்.
இந்தக் குடியிருப்புப் பகுதியில் விளையாட்டு மைதானங்கள், சமூதாய நலக்கூடம், நியாய விலைக்கடைகள், படிப்பகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங் கம்பாளையம் ஊராட்சி, கிணத் துக்கடவு வட்டாரம் வட சித்தூர் ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, எஸ்.எஸ். குளம் வட்டாரம் வெள்ளக்கிணறு (மாநகராட்சி பகுதி) ஆகிய இடங்களில் சமத் துவபுரங்கள் உள்ளன.
கோவை மாவட்டம், சமத்து வபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி- 1 திட்டத்தின் கீழ் நான்கு சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையத்தில் ரூ.39 இலட்சம் மதிப்பில் 78 வீடுகளும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகளும், மதுக்கரை வட்டாரம், செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.32.50இலட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வெள் ளக்கிணறு பகுதியில் ரூ.43 இலட்சம் மதிப்பில் 86 வீடுகளும் என மொத்தம் 319 வீடுகள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
இதில் 72 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.87 இலட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகளும், மதுக்கரை செட்டி பாளையம் பேரூராட்சியில் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகளும் என மொத்தம் ரூ.18.87 இலட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் மறுசீரமைப்புபணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சமத்துவபுரங்களில் 2 குடிநீர் வழங்கல் பணிகள், 4 சாலைப்பணிகள், 45 தெருவிளக்கு பணிகள், ஒரு விளையாட்டு மைதானம், 4 சமுதாய நலக்கூடங்கள், 2 நூலக கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம், 3 நியாயவிலைகடைகள், 3 தந்தை பெரியார் சிலைகள், 3 சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.93.71 இலட்சம் மதிப்பீட்டில் 68 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளும் நடை பெற்று வருகின்றது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம் பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கடந்த 14-ம் தேதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வீடு புனரமைப்புப் பணிகள் முடிவுற்ற மீனாட்சி வீட்டை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டு, புனரமைப்புப் பணிக ளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகள் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்து மீனாட்சியிடம் கேட்டறிந்தார். இதுகுறித்து மீனாட்சி தெரிவித்ததாவது:
நான் குடியிருக்கும் இந்த வீட்டின் மேற்கூரையில் சில இடங்களில் விரிசல் இருந்தது. இதனால் மழைபெய்யும்போது தண்ணீர் வீட்டினுள் ஒழுகும். வருமானமின்றி வயதானவர் களாக இருக்கும் எங்களால் அதை சரிசெய்யும் பொருளாதார வசதி இல்லை. எனக்கு இருதய நோய் உள்ளது. வேலைக்கு செல்ல இயலவில்லை.
முதியோர் ஓய்வூதியத் தொகையை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறேன். பெரியார் நினைவு சமத்துவபுரம் வீட்டு பராமரிப்புத் திட்டத்தின் கீழ் வீட்டினை சரி செய்ய ரூ.50,000 ஒதுக்கீடு செய்து, மேற்கூரையை சரிசெய்து, பழுதான சுவர்களில் சிமெண்ட் பூச்சு வேலை செய் யப்பட்டது.
இப்போது என் வீடு மழையின்போது ஒழுகுவது இல்லை. இப்போது சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் வீட்டை புதுப்பித்து தந்த உங்களுக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.