fbpx
Homeபிற செய்திகள்ஆணவக் கொலை செய்ய பெற்றோர் திட்டம்: பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண், கலெக்டர்...

ஆணவக் கொலை செய்ய பெற்றோர் திட்டம்: பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண், கலெக்டர் அலுவலகத்தில் புகார்

கோவை செட்டிபாளையம் சண்முகா நகரை சேர்ந்தவர் ஜாவித் உசைன். இவரது மனைவி சமீனா (31). இவர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு மனு அளிக்க வந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி. நான் 2015ம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம் பாளையத்தை சேர்ந்த ஜாவித் உசேன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டேன்.

தற்போது எங்களுக்கு 7 வயதில் காலித் உசேன் என்ற மகன் உள்ளான். எனது தந்தை புஞ்சை புளியம்பட்டியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

எனது கணவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எனது தந்தையும், அவரது சகோதரர்களும் அஸ்கர் அலி, அசரப் அலி, சவுகத் அலி, ஷான் பாஷா, இதயத் அலி, முஹம்மத் இத்ரிஸ் ஆகியோர் என்னையும், எனது கணவரையும் பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனது கணவரை தாக்குவதும், மிரட்டுவதுமாக இருந்தனர்.

இந்நிலையில் நாங்கள் பல ஆண்டுகள் அவர்களுக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். தற்போது செட்டிபாளையத்தில் வசித்து வருகிறோம்.

நாங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவர்கள் என்னையும் எனது கணவரையும் ஆணவ கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கும், எனது கணவருக்கும் குழந்தைக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img