கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தினை மாணவர்கள், இளம் ஆர்வலர்கள் இடையே வளர்ப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியரின் இன்டன்சிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து இளங்களை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நாட்கள் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். அதே போல் நீண்டகால பயிற்சியாக இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். இத்திட்டம் தொடர்பாக http://coimbatore.nic.in என்ற ஆன்லைன் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.