கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட இராமாத் தாள் லே அவுட் பகுதியில், பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட இடம் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை காணப்பட்டது.
இப்பிரச்சினை குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் கவ னத்திற்கு, 22-வது வார்டு கவுன் சிலர் கோவை பாபு கொண்டு சென்றார்.
இதையடுத்து அந்த இடத்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்த, கிழக்கு மண்டல தலைவர், ஆக்கிரமிப்புகளை அகற்றி பூங்கா இடத்தை மக்கள் பயன் பாட்டுக்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, கோவை மாநகராட்சி சுகாதார மண்டல ஆய்வாளர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு உட்பட மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.