fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு ஏ பிளஸ் பிளஸ் என்ற தரச்சான்று - வேந்தர்...

அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு ஏ பிளஸ் பிளஸ் என்ற தரச்சான்று – வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் தகவல்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதலிலிருந்து ஏ பிளஸ் பிளஸ் தரத்தைப் பெற்றுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மகளிர் பல்கலைக் கழக வேந்தர் எஸ்.பி.தியாகரா ஜன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கூறியபோது

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன சாரதாலய வளாகத்தில் கடந்த 22.2.2022 அன்று தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால்(NAAC) 4வது சுழற்சியில் ஏ பிளஸ் பிளஸ் 3.65/4.0 CGPA என்னும் தரப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆகவே, 22.2.2027 வரை இத்தரவரிசையில் உயர்கல்வி நிறுவனமானது செயல்படும். இந்நிறுவனமானது, படிப்படியாக வளர்ச்சி பெற்று முன்னேறி வருகிறது.

மேலும், பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக (அரசு மற்றும் அரசு உதவிபெறும்) தொழில்நுட்பம் என்பதன் கீழ் 5வது இடத்தைப் பெற்றுள்ளது. ATAL சாதனைக்கான நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலிலும் (ARIIa 2021) மற்றும் தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் பல்கலைக்கழக வகையின் கீழ்74வது (NIRF-2021™) தரவரிசையைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து இந்திய தரவரிசையில் இவ்அங்கீகாரமானது அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனமானது நாட்டிலேயே மிக உயர்ந்த CGPAயுடன் மகளிர் பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்றுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீட்டு தர வரிசைப்படுத்தும் தேசிய மதிப்பீட்டு அமைப்புக் குழுவினர் கடந்த 14.2.2022 முதல் 16.2.2022 ஆகிய மூன்று நாட்கள் மதிப்பீடு செய்தனர்.

மேற்கண்ட குழுவினர் பகிர் மோகன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் உத்கல் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் மதுமிதா தாஸ் தலைமையில், சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் நீலாம்பரி டேவ், ஆகியோருடன் இணைந்து, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் தடாலா மேரி மம்தா கோவிந்த் பல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறைப் பேராசிரியர் ஹிமா பிந்து மரிங்காண்டி மற்றும் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் துறைப் பேராசிரியர் சுக்லீன் பிந்த்ரா நரங், மற்றும் ஜம்மு பல்க லைக்கழகத்தின் வணிகவியல் துறைப் பேராசிரியர் அல்கா ஷர்மா ஆகியோர் இணைந்த குழுவினர் வருகை புரிந்தனர்.

அவர்களுடன் தேசிய மதிப்பீட்டு தரச்சான்றுக் குழுவினரின் ஆலோசகர் முனைவர் பி.எஸ்.பொன்முடிராஜ் கலந்து கொண்டார்.

இவ்உயர்கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பி.தியாகராஜனின் வழிகாட்டுதலுடன் நிபுணத்துவம் நிறைந்த மதிப்பீட்டுக் குழுவினர் கற்பித்தல் மற்றும் கற்றல் வளம், ஆராய்ச்சி தொழில்சார் கூட்டுத் திட்ட செயல்பாடுகள், பட்டதாரி உருவாக்க வெளிப்பாடுகள், நிறுவன கண்ணோட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏழு அளவு கோல்களின் அடிப்படையிலும் தரமான அளவீடுகளின் விரிவான மதிப்பீட்டு முறைகளை மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஏ பிளஸ் பிளஸ் தரசான்று கிடைத்துள்ளது மேற்கண்டவாறு அவர் கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img