ஹரிபவனம் ஹோட்டலின் 7-வது கிளை அவினாசியில், திருப்பூர்-அவினாசி ரோடு சர்வீஸ் டிராக், தேசிய நெடுஞ்சாலையில், சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்ஸி-ல் நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டது. உரிமையாளர் பாலச்சந்தர் ராஜூவின் தாயார் ருக்மணி புதிய கிளையை திறந்து வைத்தார்.
50-வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இங்கு நிறுவப்பட்டுள்ள ஹரிபவனம் நிறுவனர் எஸ்.ராஜூவின் சிலையினை அன்னபூர்ணா ஹோட்டல் இணை நிர்வாக இயக்குநர் டி.ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.
பூமராங் பிரத்யேக ஐஸ் கிரீம் பார்லரை ஹரிபவனம் உரிமையாளர் ராஜூ திறந்து வைத்தார். தனிப்பட்ட டைனிங் ஹால்-ஐ நில உரிமையாளர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். கஃபேயினை மணி திறந்து வைத்தார்.