fbpx
Homeபிற செய்திகள்அவிநாசி ஹரிபவனம் கிளையில் நிறுவனர் உருவச்சிலை திறப்பு வைரமுத்து பங்கேற்பு

அவிநாசி ஹரிபவனம் கிளையில் நிறுவனர் உருவச்சிலை திறப்பு வைரமுத்து பங்கேற்பு

ஐம்பதாவது பொன்விழாவினை சமீபத்தில் கொண்டாடிய ஹோட்டல் ஹரிபவனம் கிளை அவிநாசியில், சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்ஸில் திறக்கப்பட்டுள்ளது. இக்கிளையில் ஹரிபவனம் நிறுவனர் எஸ்.ராஜூவின் திருவுருவச் சிலை மற்றும் சிறப்பு பட்டம் சூட்டும் விழா நடந்தது.

கவிப்பேரரசு வைரமுத்து, இச்சிலையை திறந்து வைத்தார்.

இக்கிளையில் 50 பேர் அமரக்கூடிய வகையில் பேங்குவிட் ஹால் அமைக்கப்பட்டுள்ளது.

25 பேர் அமரத்தக்க வகையில் தனிப்பட்ட டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. பூமராங் பிரத்யேக ஐஸ் கிரீம் பார்லர் இடம் பெற்றுள்ளது.

ஹரிபவனம் ஹோட்டலின் கிளைகள் கோவை காந்திபுரம், ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, பீளமேடு, கோல்டு வின்ஸ், புரோஜோன்மால், புரூக்ஃபீல்ட்ஸ் மால் உள்ளிட்ட பகுதிகளிலும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

கோவையில் 1971-ம் ஆண்டு முதல் அசைவம் மற்றும் சைவ உணவுப் பிரியர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஹோட்டல் ஹரிபவனம்.

இத்தகவலை ஹரிபவனம் நிர்வாக இயக்குநர் பாலச்சந்தர் ராஜூ தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img