டிடிகே (TTK) பிரெஸ்டிஜ் லிமிட்டெடின் துணை நிறுவனமும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாடுலர் கிட்சன் நிறுவனங்களில் ஒன்றான அல்ட் ராஃப்ரெஷ் மாடுலர் சொல்யூஷன்ஸ் லிமிடெட், தென் பிராந்தியத்திலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், தனது முதல் ஸ்டுடியோவை கோவையில் அமைத்துள்ளது.
கோவையில் உள்ள முதல் உரிமையாளர் சில்லறை விற்பனை நிலையமாக சுமார் 1,200 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் தனித்துவமான மாடுலர் கிட்சன்கள், வார்ட்ரோப் கள் மற்றும் டிஸ்ப்ளே யூனிட்டுகளைக் கொண்டுள்ளது.
அல்ட்ராஃப்ரெஷ் நிறுவனத்தை டிடிகே பிரெஸ்டிஜ் லிமிடெட் சமீபத்தில் கையகப்படுத்திய பிறகு இந்த “ஒன் ஸ்டாப் ஷாப் முன்முயற்சி எடுக்கப்பட்டது. இது தமிழ்நாட்டில் அல்ட்ராஃப்ரெஷின் 8-வது ஸ்டுடியோவாக இருக்கும்,
தற்போதுள்ள ஸ்டுடியோக்கள் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது.
இந்நிறுவனத்தின் முதல் மாடுலர் கிச்சன் ஸ்டுடியோவை சென்னையில் துவங்கிய உடனேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. அல்ட் ராஃப்ரெஷ் ஸ்டுடியோ நான்கு தனித் துவமான மாடுலர் கிச்சன்களை வழங்குகிறது.அல்ட்ராஃப்ரெஷ் மாடுலர் சொல்யூஷன்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி துருவ் திரிகுனாயத் பேசும் போது, அதிகரிக்கும் நகரமயமாக்கல் மற்றும் மாறுபடும் வாடிக்கையாளர் தேவைகள், இந்தியாவின் அடுக்கு மிமி மற்றும் மிமிமி நகரங்களில் புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மாடுலர் கிச்சன் கோட்பாடு
இரண்டாம் அடுக்கு நகரங்களில் கோவையும் ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், மாடுலர் கிச்சன் கோட்பாடு சார்ந்து வளர்ந்து வரும் தேவையையும் கருத்தில் கொண்டு, கோவையில் முதல் ஃபிரான்சைஸ் ரீடெய்ல் ஸ்டோரைத் தொடங்க முடிவு செய்தோம்.
இது மாடுலர் கிச்சன் மற்றும் ஹோம் டெக்கார் பகுதிகளில் இதுவரை வெளிப்படாத திறனைக் காட்டுகிறது. வரும் மாதங்களில் பாண்டிச்சேரி, ஷிமோகா மற்றும் தமிழ் நாட்டின் நாகர்கோவிலில் ஸ்டுடியோக்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
கோவையில் முதல் ஸ்டுடியோ வெளியீட்டு விழாவை ஒட்டி, அல்ட்ரா ஃப்ரெஷ் மாடுலர் கிச்சன் முன்பதிவுகளுக்கு சீரான 25% சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.