fbpx
Homeபிற செய்திகள்அலுவலகம் இடிப்பு: கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

அலுவலகம் இடிப்பு: கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மேட்டுப்பாளையம் பகு தியை சேர்ந்த முகமது சாதிக் பாஷா தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது

கோவை மேட்டுப் பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது சா திக் பாஷா (34) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோத்தகிரிசாலை யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அலுவல கம் அமைத்து வீட்டு மனைகளை விற்று வரு கிறார்.

இந்நிலையில் டாஸ்மாக் பார் அமைப் பதற்காக இவரது அலுவ லகத்தை காலி செய் யக்கோரி சில நபர்கள் கட்டாயப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் இவர் சற்று கால அவ காசம் கேட்டுள்ளார், இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி இவரது அலுவலகத்தில் புகுந்து மர்மநபர்கள் இவரது அலுவலகத்தை அடித்து உடைத்து அதில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முகமது சாதிக் பாட்சா மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத தால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அங்கேயும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்டஆட் சியர் அலுவலகம் வந்த முகமது சாதிக் பாஷா தனது உடலில் மண் ணெண்ணெய் ஊற்றி தற் கொலைக்கு முயன்றார்.

இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென் றனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img