Homeபிற செய்திகள்அறிவொளி இயக்கப் பணியில் அர்ப்பணித்தவர்களுக்கு விருது

அறிவொளி இயக்கப் பணியில் அர்ப்பணித்தவர்களுக்கு விருது

கோவை மாவட்டத்தில் அறிவொளி இயக்கத்தில் பாமர மக்களுக்கு எழுத் தறிவிக்கும் பணியில் அர்ப்பணித்தவர்களுக்கு, விருது வழங்கும் விழா, விளையாட்டுப் போட்டிகள், அறிவொளி சொந்தங்கள் சந்திப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

போத்தனூர் செட்டிபாளையம் சி.டி. பவுண்டேசன் சமூக மை யத்தில் நடந்த விழாவில், சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை அறங்க £வலர் சிந்து வரவேற்றார்.

1991-ம் ஆண்டு முதல் அறிவொளி இயக்கத்தின் மூலம் எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தன்னார்வமாக இணைத்துக் கொண்டு தன்னலமற்ற சேவை புரிந்தவர்கள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து ஒரு வருக்கொருவர் தங்களது அன்பையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர். அறிவொளி இயக்கத்தில் தொண்டாற்றி மறைந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டிகளில் வென் றவர்களுக்கு எழுத்தாளர் வி.கே.பாலதண்டபாணி, குவளை மணியன் ஆகி யோர் பரிசுகள் வழங்கி பாராட் டினர்.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில், யாருடனும் பகை கொள்ளலன் என்ற தலைப்பில் எழுத்தாளர் ரெங்கலொ வள்ளியப்பன் பேசினார்.

மாலையில், அறிவொளி இயக்கத்தில் இணைத்துக் கொண்டு தன்னலமற்ற சேவைபுரிந்த கற்போர், நாடக கலைஞர்கள், தன்னார்வலர், ஆசிரியர்கள், கிராம அமைப்பாளர்கள், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றியத் திட்ட ஒருங்கி ணைப்பாளர்கள், மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவொளி சிற்பி, அறிவொளிச் சிகரம், அறிவொளிச் சுடர் விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு பாரதியார் பல்கலைக் கழக வயது வந்தோர் கல்வித் துறையின் ஓய்வு பெற்ற இயக்குநர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கோவை மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத் தந்ததோடு அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக மாற்றிய பெருமை தன்னலமற்ற அறிவொளி தொண்டர்களையேச் சாரும்.

அதன் தொடர்ச்சியாக நடந்த தொடர் கல்வி இயக்கம் வளர்கல்வி இயக்கம் வரை மக்களை தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யக் கற்றுக் கொடுத்ததோடு, அரசின் நலத்திட் டங்களில் பங்கேற்று பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுத்தது பாராட்டுக் குரியது என்றார்.

பூ.சா.கோ.கலை அறிவியல் துறை வணிகவியல் துறை பேராசிரியர் (ஓய்வு) கே.ராமசாமி பேசும்போது, அறிவொளி இயக்கம் மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் கூட அரிக்கேன் விளக்கு வெளிச்சங்களில் அறிவுச்சுடர் ஏற்றியதோடு, அறி வொளியின் தாக்கம் இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மலர்ந்தது என்று சொன்னால் மிகையாகாது என்று குறிப்பிட்டார்.

தேசிய குழந்தைத்தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் இயக்குநர் கவிஞர் தெ.வி.விஜயகுமார் பேசும்போது, மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டுத் திகழ்கிறான்.

வாழ்நாள் முழுவதுவம் ஒருவருக்கு ஒருவர் அன்பையும், மனித நேயத்தையும் மறக்காமல் உதவி கொள்வதோடு, மற்றவர்களின் பொருளாதார வளர்ச் சிக்கு வழிகாட்டிகள். ஆண்டுக்கு ஒரு முறையாவது சந்தித்து அன்பு பாராட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினர்களாக சிரவை ஆதீனம் முனைவர் குமரகுருபர சுவாமிகள், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஜிப்சி ராஜ்குமார் ஆகியோர் அறிவொளி தொண்டர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

அறிவொளி ஆர்வலர் அம்ச« வணி யுவராஜ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img