fbpx
Homeபிற செய்திகள்அறிவியல் வளர்ச்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும் ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை

அறிவியல் வளர்ச்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும் ஆண்டு விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை

கோவை, துடியலூர் வட்ட மலைபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு எஸ். என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கல்லூரி துணை முதல்வர் முனைவர் கருப்புசாமி வரவேற்று, கல்லூரி அடைந்த வளர்ச்சிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளின் கல்வி விளையாட்டு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற சாதனைகளை பட்டியலிட்டு ஆண் டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை எல்ஜி எக்யூப்மென்ட் டிஜிட்டல் ட்ரான்ஸ்பெர்மேஷன் துறைத்தலைவர் முனைவர் பி. சோமசுந்தரம் பேசும்போது, மாண வர்கள் சுயமாக சிந்தித்து கற்றல் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்கள் மற்றும் சுற்றியிருப்பவர்கள் மூலம் நடப்பு அறிவியல் வளர்ச்சிகளை சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் 5.0 எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையும் மாணவ, மாணவியருக்கு எடுத்துக் கூறினார்.

கல்லூரி விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங் காவலர் பெற்றுக் கொண்டார்.

கல்லூரியின் துவக்க நாள் முதல் சிறப்பாக சேவையாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்க ளும், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்களும், சிறந்த ஆராய்ச்சி புரிந்த பேராசிரியர்களும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பாக எண்டோவ்மென்ட் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கடந்த கல்வியாண்டில் கல்வி விளையாட்டு மற்றும் அனைத்து ஊக்க திறன் மேம்பாடு துறைகளில் சிறப்பாக செயல் புரிந்தமைக்காக சிறந்த மாணவர் விருது ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்த சக்தி சூர்யா, சிறந்த மாணவியர் விருது எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த தாரணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நாட்டியத்தில் சிறப்பான பங்களிப்பினை செய்ததற் காக நாட்டியாஞ்சலி வித்யா சாதனை விருது மற்றும் சங்கீத சாதனை மாணவ, மாணவியருக்கு வழங்கப் பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.கற்பகம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img