fbpx
Homeபிற செய்திகள்அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 4 மாடல் விலை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவிப்பு

அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 4 மாடல் விலை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவிப்பு

புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரின் 4 மாடல்களுக்கான விலையை டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 4 மாடல் கார்களும் படிப்படியாக விற்பனைக்கு வரவிருக்கிறது. இவற்றின் விலை ரூ.15,11,000 முதல் துவங்கி ரூ.18,99,000 வரை உள்ளது.

புதிய எஸ்யூவி கார் கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகளும் துவங்கியது.

எக்ஸ்-ஷோரூம் விலை: காரின் மாடல் –V eDrive 2WD HYBRID ரூ.18,99,000, G eDrive 2WD HYBRID ரூ.17,49,000, S eDrive 2WD HYBRID ரூ.15,11,000, V AT 2WD NEO DRIVE ரூ.17,09,000.

அனைத்து மாடல் கார்களுக்கும் இந்தியா முழுவதும் ஒரே விலை.
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத் தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசனை பிரிவு இணை துணைத் தலைவர் அதுல் சூட் கூறியதாவது:

எஸ்யூவி பி பிரிவில் வெளிவந்திருக்கும் இந்த கார் செல்ப் – சார்ஜிங் தொழில் நுட்பத்தில் வெளிவந்திருக்கும் முதல் காராகும். சிறந்த எரிபொருள் திறன், அதி வேகம், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் முன்மாதிரியான செயல்திறனை இந்த கார் கொண்டுள்ளது.

புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இது ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் மற்றும் நியோ டிரைவ் ஆகிய இரண்டு விதமான பவர்டி ரெய்ன்களுடன் வருகிறது.

செல்ப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் மாடல் கார் இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுகிறது. இது 40 சதவீத தூரம் மற்றும் 60 சதவீத நேரம் மின்சாரத்தில் இயங்குகிறது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 27.97 கிலோ மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டதாகும்.

நியோ டிரைவ் காரில் கூடுதலாக, 1.5-லிட்டர் கே-மாடல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் விருப்பத் தேர்வுகளுடன் எரி பொருள் சிக்கனத்திற்கான 6-ஸ்பீடு ஆட்டோமேட் டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img