fbpx
Homeதலையங்கம்அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’ வருகிறது!

அரசு ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’ வருகிறது!

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தின. அந்தத் திட்டத்தின் மூலமாக எந்தவித பணப் பலன்களையும் ஓய்வு காலத்திற்கு பிறகு ஊழியர்கள் பெற முடியாது.

இதற்கு அனைத்து மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை ரத்து செய்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் கோரிக்கை நிறைவேறும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழக அரசு இது தொடர்பாக தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது.

இதனால் தமிழக அரசு விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக… விரைவில் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிற தமிழக அரசு விரைவில் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இனிப்பான குட் நியூஸை அறிவிக்கும், அதில் சந்தேகம் இல்லை.

அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே சற்றே பொறுத்திருங்கள்!

படிக்க வேண்டும்

spot_img