fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் காரியாபட்டி பேரூராட்சி தலைவராக செந்தில், துணைத்தலைவராக ரூபி சந்தோசம் பதவி...

அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் காரியாபட்டி பேரூராட்சி தலைவராக செந்தில், துணைத்தலைவராக ரூபி சந்தோசம் பதவி ஏற்பு

காரியாபட்டி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட செந்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென் னரசு முன்னிலையில் பதவி ஏற் றுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் காரியா பட்டியில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 15 வார்டுகளில் திமுக 12வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக 3 வார்டுகளில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற தலைவர் தேர்தலில் 10வது வார்டு கவுன்சிலர் ஆர். கே.செந்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத்தலைவராக 4வது வார்டு திமுக கவுன் சிலர் ரூபி சந்தோசம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பு விழாவில் திருச்சுழி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தொழில் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்று. புதிய பேரூராட்சி நிர் வாகிகளை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது ‘25 ஆண்டுகளுக்குப் பிறகு காரியாபட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்களுக்குள் காரியாபட்டி பேரூராட்சியில் இதுவரை 2 கோடி ரூபாய் மதிப் பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளை செய்து முடித்துள்ளோம், என்றார்.

நிகழ்ச்சியில் தேர்தல் பணிக் குழு பொறுப்பாளரும் திருச்சுழி யூனியன் தலைவருமான பொன்னு தம்பி, ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், சந்தன பாண்டியன், மாவட்ட கவுன் சிலர் தங்க தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிவசக்தி, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி, மகளி ரணி அமைப்பாளர்கள் செல்வி, உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img