அமேசான் இந்தியா ‘பேக் டு ஸ்கூல்’ என்ற அனைத்து மாணவர்களுக்குமான ஒரு பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டோரை அறிவித்துள்ளது. இந்த ஸ்டோர் நாளை (ஜூன் 12) வரை மட்டும் செயல்படும்.
எச்பி, லெனோவா, ஆசஸ், ஹானர், சியோமி மற்றும் டெல் போன்ற புகழ் பெற்ற பிராண்டுகளில் அத்தியாவசிய படிப்பு மற்றும் எழுதுபொருட்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிசிக்கள், ஹெட்செட்டுகள் மற்றும் ஸ்பீக்கர்கள், பிரிண்டர்கள் போன்றவற்றை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு 40% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மடிக்கணினிகளின் தேவையைப் பொறுத்தவரை, மற்ற அனைத்து இந்திய மாநிலங்களிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பதையும் Amazon.inசுட்டிக்காட்டுகிறது. நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது மற்றும் இந்த போர்ட்ஃபோலியோவில் 30 ஆயிரம், 35 ஆயிரம், 45 ஆயிரம், 70 ஆயிரம் மற்றும் இது போல பல்வேறு விலை வரம்புகளில் டாப் பிராண்டுகளின் சமீபத்திய தயாரிப்புகளைச் சேர்த்துள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட சிறிய நகரங்களுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் ஆகிய முதன்மை நகரங்கள், மாநிலத்தில் மடிக்கணினி பிரிவில் கூடுதல் வளர்ச்சிக்கு காரணமாகும். ஹெச்பி, லெனோவா, ஆசஸ் ஆகியவை இப்பகுதியில் டாப் பிராண்டுகளாகும்.
Amazon.in வலைதளத்தில் மடிக்கணி தேடல் எண்ணிக்கையில் இரட்டை இலக்க நேர்மறை வளர்ச்சியை அமேசான் இந்தியா அடைந்துள்ளது.
“கடந்த 2 ஆண்டுகளில், வீட்டிலிருந்து பணிபுரிதல் முறையின் காரணமாக அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் மடிக்கணினிகளுக்கு மாறியுள்ளனர் மற்றும் வீட்டு பயன்பாடு மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
இப்போது, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதன் மூலம், இப்பகுதியில் மடிக்கணினிகளுக்கான தேவை அதிகரித்திருப்பதைக் கண்டுள்ளோம். தமிழக வாடிக்கையாளர்கள் Amazon.in வலைத்தளத்தில் வட்டியில்லா இ.எம்.ஐ மற்றும் பல்வேறு நிதித் திட்டங்களைப் பயன்படுத்தி மடிக்கணினிகளை வாங்கி வருகின்றனர்.
பல்வேறு விலை வரம்புகளில் கிடைக்கும் பலதரப்பட்ட மடிக்கணினிகளை Amazon.in வலைத்தளத்திலிருந்து அவர்கள் தேர்வு செய்கிறார்கள். வீட்டிற்கே விரைவு டெலிவரி செய்வதால் வாடிக்கையாளர்கள் அதிகம் பயனடைகிறார்கள்.
Amazon.in வலைத்தளத்தில் பிரீமியம்/நடுத்தர-ரக மடிக்கணினிகள் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன” என்று அமேசான் இந்தியாவின் நுகர்வோர் மின்னணுவியல் இயக்குநர் அக்ஷய் அஹுஜா கூறினார்.