Homeபிற செய்திகள்அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘ஸ்மைல் ட்ரெயின்’ தொண்டு நிறுவனத்தில் இலவச சிகிச்சை

அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ‘ஸ்மைல் ட்ரெயின்’ தொண்டு நிறுவனத்தில் இலவச சிகிச்சை

அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் ‘ஸ்மைல் ட்ரெ யின்’ என்னும் தொண்டு நிறுவனத்தை துவக்கி சிகிச்சை அளித்து வருகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 27 ஆயிரம் முதல் 33 ஆயிரம் குழந்தைகள் உதடு பிளவு மற் றும் அன்னப்பிளவு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன என்று ஓர் ஆய் வில் தெரியவந்திருக்கிறது.

உதடு பிளவு அல்லது அன்னப் பிளவு என்பது வாயின் மேல் பகுதியில் உள்ள உதடு பிளவுபட்ட நிலையில் இருக்கும்.

‘ஸ்மைல் ட்ரெ யின்’ என்ற சர்வதேச குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தில் அன்னப்பிளவு அறுவை சிகிச்சை மற்றும் அன்னப் பிளவு பராமரிப்பு சிகிச்சை ஆகியவை 100 சதவீதம் இலவசமாக அளிக்கப்படுகிறது.

உலக அளவில் உள்ள மிகப் பெரிய அன்னப்பிளவு தொடர்பாக சிகிச்சை அளிக்கும் தொண்டு நிறு வனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இது அன்னப்பிளவு பரிசோதனை முகாம்களை தமிழ்நாடு மற்றும் ஆந்தி ராவில் வழக்கமாக நடத்தி வருகிறது. அன்னப்பிளவு சிகிச்சை உடன் பேச்சு சிகிச்சை, முன்பற்களால் மேல் உதட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, செயற்கையாக பற்களை பொருத்துதல் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதில் பரிசோதனை, அறுவை சிகிச்சைகள், மருந்துகள், நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவி யாளர்களுக்கும் இலவச உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகி யவையும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு இன்றைய தேதி வரை மொத்தம் 794 பேருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை எந்தவித தயக்கமின்றி மீண்டும் சிரிக்க வேண்டும், சிரமமின்றி உணவை உட்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் விருப்பமாகும். இதை பூர்த்தி செய்யும் விதமாக சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ் செயல்பட்டு வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img