ராமநாதபுரம் மாவட் டம் அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஸ்கோர் அறக்கட்டளை மற்றும் ஊராட்சி தலைவர் சார்பில் இலவச மகளிர் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா லிங்கம் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத் தார்.
கிராம நிர்வாக அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார்.
முகாமில் ராமநாத புரம் பயோனியர் மருத்துவமனை செவிலியர் கண்கா ணிப்பாளர் பாத்திமா, மதுரை ஹோம் கேர் ஜியோ வியோ சேவ் மாம் செந்தில்குமார் முருகேசன், தினேஷ் பாண்டியன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் ரமேஷ், தர்பா குரூப் ஆப் கம்பெனி சேர்மன் அகமது தம்பி கல்வத்தி, ஸ்கோர் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் செபாஸ்டியன், டாக்டர் சௌந்தர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.