ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப் பன் , சிவகங்கையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்ற அரசு விழாவின் போது, அங்கன்வாடி குழந்தைகள் சிறு வயதிலிருந்து நல்லொழுக்கம், நீதிநெறி பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளும் வகையிலான புத்தகங்களை, அங்கன்வாடிப் பணியாளர்களிடம் வழங்கினார்.
நிகழ்வில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதா வது: மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் ஆரோக்கியத்து டனும், நல்லொழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர் களாக எதிர்காலத்தில் திகழ வேண்டும் என்பதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் உத்தர வின்படி, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர வேண்டும் என்பதற்காக காலை மற்றும் மாலையில் ஊட்டச்சத்து மாவில் கொழுக்கட்டை, உருண் டை வழங்கப்படுகிறது.
மதிய உணவின் போது திங்கள், புதன், வியாழன் ஆகிய 3 நாட்களில் முட்டையும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை கலவைச் சாதமும் வழங்கப்பட்டு வரு கிறது. குழந்தைகள் கல்வி கற்றிட முன்பருவக்கல்வி பணியா ளர்களால் கற்பிக்கப்பட்டு வரு கிறது.
சிவகங்கை மாவட்டத்தில், தேவகோட்டை வட்டாரத்தில் 164 மையங்களில் 2,671 குழந்தைகளும், இளையான்குடி வட்டாரத்தில் 149 மையங்களில் 2,381 குழந்தைகளும், காளையார் கோவில் வட்டாரத்தில் 168 மையங்களில் 2,648 குழந்தைகளும், கல்லல் வட்டாரத்தில் 115 மையங்களில் 1,881 குழந்தைகளும், கண்ணங்குடி வட்டாரத்தில் 49 மையங்களில் 572 குழந்தைகளும், மானாமதுரை வட்டாரத்தில் 147 மையங்களில் 2,195 குழந்தைகளும், எஸ்.புதூர் வட் டாரத்தில் 69 மையங்களில் 1,372 குழந்தைகளும், சாக் கோட்டை வட்டாரத்தில் 171 மையங்களில் 2,697 குழந்தைகளும், சிங்கம்புணரி 94 மையங்களில் 1,723 குழந்தைகளும், சிவகங்கை வட்டாரத்தில் 158 மையங்களில் 2,939 குழந்தைகளும், திருப்பத்தூர் வட்டாரத்தில் 134 மையங்களில் 2,120 குழந்தைகளும், திருப்புவனம் வட்டாரத்தில் 134 மையங்களில் 2,737 குழந்தைகளும் என மொத்தம் 12 வட்டாரத்தில் 1,552 மையங்களில் 25,936 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
குழந்தைகள் மழலைப் பருவத்திலிருந்தே நல்ல ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளவும், நீதிநெறிகளை அறிந்து கொள்ளவும், சமு தாயப்பண்புகளை தெரிந்து கொள்வதற்காகவும், குழந்தைகள் மகிழ்விக்கும் விதத்திலும், அன்றாட வாழ்க்கையில் கடைபி டிக்க வேண்டிய பழக்கங்களை தெரிந்து கொள்ளவும், படத்தை பார்த்து கற்றுக்கொள்ளும் போது, ஆழப்பதிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திடும் பொ ருட்டும், கற்பிப்பதோடு புத்த கங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திட்ட அலுவலர் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பங்களிப்பாக ரூ.1,54,300 மற்றும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி ரூ.2,63,550 என மொத்தம் ரூ.4,17,850 மதிப்பிலான புத்தகங் கள் வாங்கப்பட்டு, அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திற்கும் வழங்கப்பட்ட புத்தகத்தில் ஆத்திச்சூடி, அக்பர், பீர்பால் நீதிக்கதைகள், மழ லைப்பாடப் புத்தகங்களான ரெயின்போ ஆங்கிலப்பாடல், அருணாவின் தமிழ்ப்பாடல், மழலையருக்கென இனிய கதைகளில் விறகுவெட்டியும், மெர்க்குரியும், எண் குறியீடுகள், திருக்குறள் அட்டவணை, நல்ல பழக்கவழக்க புத்தகங்கள், சிறு வர் பாடல்கள் அடங்கிய புத்தகத்தொகுப்பு அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பணி யாளாகள் இதனைப் பயன்படுத்தி நல்ல பழக்கவழக் கங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து சிறந்த இளைஞர்களாக உருவாகும் வகையில் பணியாற்றிட வேண் டும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார், ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் மஞ்சுளா பாலசந்தர், லதா அண்ணாத்துரை, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத்தலைவர் த.கார்கண்ணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ப.பரமேஸ்வரி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அமுதா, போசான் அபியான் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கீதவர்ஷினி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்